மத்திய அரசு மருத்துவ நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரியில் கோரிமேட்டில் இயங்கி வரும் ஒரு பிரசித்திபெற்ற மருத்துவமனை ஆகும். ஏராளமான நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிம்பர் மருத்துவமனை (Jipmer Hospital) சமீபத்தில் கொண்டு வந்த ரேஷன் கார்டு விதிமுறையை திரும்பப்பெற்றுள்ளது. புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலத்திலிருந்தும் சிகிச்சைக்கு வரும் ஏழை மக்கள் ரேஷன் கார்டுகளை காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை என ஜிப்மர் தெரிவித்துள்ளது. எனினும், தாங்களாக முன்வந்து இவ்வாற்று செய்ய நினைப்பவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று ஜிப்மர் கூறியுள்ளது. 


இது குறித்து ஜிப்மர் மருத்துவமனை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


- ஒரு நோயாளி (Patient) சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, பி.பி.எல் அட்டையைக் காட்டுவது கட்டாயமில்லை. இது நோயாளிகளைப் பொறுத்தது. எனினும், அவ்வாறு செய்ய முன்வருபவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.


- தற்போது உள்ளது போல, அனைத்து வருமான வரம்பில் உள்ள மக்களுக்கும், அவுட் பேஷண்ட் பிரிவில் இலவச சிகிச்சை, மருந்து விநியோகம், வழக்கமான செக் அப் ஆகியவை தொடரும்.


-  அனைத்து வருமான வரம்பில் உள்ள மக்களுக்கும், இலவச அவசர சிகிச்சைத் தொடரும்.


-  தற்போது உள்ளது போல, ஜெனரல் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் அனைத்து நோயாளிகளும், அவர்கள் எந்த வருமான வரம்பிற்குள் வந்தாலும், அவர்களிடன் கட்டணம் வசூலிக்கப்படாது. 



ALSO READ: ஜிப்மர்: இலவச சிகிச்சை வேண்டுமா? சிவப்பு ரேஷன் கார்டு கொண்டு வாங்க!


முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் ஜிப்மர் நிர்வாகம் அனைத்து துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. இதில், அக்டோபர் 1 முதல் வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள், தங்கள் வருமான வரம்பு நிலையை நிரூபிக்க, பிபிஎல் ரேஷன் அட்டையை தங்களுடன் எடுத்து வரவேண்டும் என்று கூறியிருந்தது.


இதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன. ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா என பல தரப்பினரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். 


சிகிச்சை பெற வரும் நோயாளி தன்னோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமானது அல்ல என்று பலர் கருத்து தெரிவித்தனர். ஜிப்மர் மருத்துவமனையின் இந்த நடவடிக்கைக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. 


புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan) , ஜிப்மர் மருத்துவமனை பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கூறினார். பல அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


இந்த நிலையில், முந்தைய உத்தரவை மாற்றி, ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 


ALSO READ: Reservation: இனி மருத்துவப் படிப்பிலும் EWS இடஒதுக்கீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR