மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளியில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...


மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், பழங்குடியினர் நலத்துறையின் கீழ், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளி கல்விச் சங்கத்தில் மூலம் சேலம், விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கிவரும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் CBSE -ன் கீழ் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளது.


விண்ணப்பிக்க விருப்பமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பழங்குடியினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை – 5, க்கு உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 


முறையான விண்ணப்பத்துடன் தகுதி சான்று 2 பிரதிகள், விண்ணப்பதாரின் கைபேசி எண்கள் குறிப்பிட்டு வந்து சேர வேண்டிய கடைசி நாள். 20.08.2018


விண்ணப்பங்களை பெற / அனுப்ப வேண்டிய முகவரி.


இயக்குநர், 
பழங்குடியினர் நல இயக்குநரகம்,
சேப்பாக்கம்,
சென்னை - 5