இலவச தாய் சேய் ஊர்தியில் பணிபுரிய ஓர் வாய்ப்பு!
இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய் சேய் ஊர்தியின் நிர்வாகத்தில் பணிபுரிய ஆட்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 06.06.2018 அன்று நடைபெறுகிறது!
தமிழ்நாடு அரசு உதவியுடன் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளையின் மூலம் செயல்படுத்தி வருகின்ற இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய் சேய் ஊர்தியின் நிர்வாகத்தில் பணிபுரிய ஆட்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 06.06.2018 புதன்கிழமை அன்று சென்னை எழும்பூரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணியில் சேர விரும்பும் நபர்கள் முகாமிற்கு சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணி பற்றிய விவரங்கள்/ நிபந்தனைகள்...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரிய ஆட்கள் எடுக்கப்படுகிறது.
பணிபுரியும் நேரம்: பகல் 8 மணி நேரம்
முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.
பயண மற்றும் இருப்பிட செலவுகள் வழங்கப்படமாட்டாது.
வயது வரம்பு: 25 முதல் 40 வயதுக்கு மிகாமல்.
பதவி மற்றும் அனுபவம்:-
தகவல் தொடர்பு அலுவலருக்கான அடிப்படை தகுதிகள் (Communication Despatch Officer)
பணிபுரியும் மாவட்டம் : சென்னை
பணிபுரியும் நேரம் : 9 மணி நேரம் - பகல் இரவு மாற்று shift முறையில்
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ B.Sc செவிலியர் படித்திருத்தல் அவசியம்
மற்ற தகுதி : தட்டச்சு பயிற்சி
மாத ஊதியம் : ரூ.11,000/-
ஆலோசகருக்கான அடிப்படை தகுதிகள் (Counsellor)
பணிபுரியும் மாவட்டம் : சென்னை
பணிபுரியும் நேரம் : 9 மணி நேரம் - பகல் இரவு மாற்று shift முறையில்
கல்வித் தகுதி : B.Sc அல்லது டிப்ளமோ செவிலியா;
மற்ற தகுதி : தட்டச்சு பயிற்சி
மாத ஊதியம் : ரூ.12,000/-
ஓட்டுநர் (Driver) – அனைத்து மாவட்டங்கள் அனைத்து மாவட்டங்கள்
12 மணி நேரம் - பகல் / இரவு மாற்று shift முறையில்.
பயண மற்றும் இருப்பிட செலவுகள் வழங்கப்படமாட்டாது.
8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 முதல் 45 வயதுக்கு மிகாமல்.
உயரம்: 162.5 சென்டிமீட்டர்.
ஓட்டுநர் தகுதி மற்றும் அனுபவம்...
இலகுரக வாகன ஓட்டுநர் (HV) உரிமம் அல்லது பேட்ஜ் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூ.11,639/- (சென்னை, திருவள்ளுர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டால் கூடுதல் சலுகையாக ரூ.1860/- வழங்கப்படும்).
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் தொடர்பான அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்வுக்கு வரும் போது கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளையின் தொலைபேசி எண் 044-28554548 வாரநாட்களில் காலை 10.00 முதல் மாலை 5.00 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.
நேர்முக தேர்வு நடைப்பெறும் இடம்:
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளை
32/50 ரெட்கிராஸ் சாலை,
எழும்பூர் சென்னை – 600 008.
நாள் : 06.06.2018 (புதன் கிழமை)