இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக சௌத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன்
(South India Schools Cricket Associations) அமைப்பு தொடங்கப்பட உள்ளதாக அமைப்பின் நிர்வாகிகள்  ஜான் அமலன்,பிரதீப் குமார், ஏபிஜேஎம்ஜே ஷேக் சலீம், ஜோஷ்வா எடிசன், குடந்தை அஷ்ரப், விக்னேஷ் மாஜினி  ஆகியோர்  அறிவித்துள்ளனர். இந்தியாவில் அதிக மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட் போட்டி ஆனால், பலர் திறமை இருந்தும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போகிறார்கள். காரணம், இளம் வயதில் திறமையாக கிரிக்கெட் விளையாடும் பலருக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வழி தெரியாததும், சரியான வழிகாட்டி இல்லாததும்தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் கிரிக்கெட்டில் திறமை மிக்க இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு  திறமையாளர்களை தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்க வைப்பதற்கான தளமாக South India Schools Cricket Associations தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி காலத்திலேயே இளைஞர்களை ஊக்குவித்து கிரிக்கெட் உலகில் ஜொலிக்க வைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக ஜான் அமலன்  தேர்வு செய்யப்பட்டுள்ளார் பொதுச்செயலாளராக பிரதீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக ஜோஸ்வா எடிசன், பொருளாளராக குடந்தை அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு கொடுக்கப்படும் நிதி - இந்தியன் அவார்ட்ஸின் முயற்சி


சௌத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன் கௌரவத் தலைவராக சினேகா நாயரும், தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் பெடரேஷன் கௌரவத் தலைவராக அப்துல்கலாமின் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் சலீமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பதவி ஏற்க உள்ளனர்.


மேலும் படிக்க | பாஜக உறுப்பினர் அட்டையில் தமிழிசை கையெழுத்து... அப்போ அண்ணாமலை நிலைமை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ