ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு கொடுக்கப்படும் நிதி - இந்தியன் அவார்ட்ஸின் முயற்சி

ஜான் அமலன் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள Indian Awards 2022 மற்றும் Mr Miss & Mrs Thamizhagam விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின்  மூலம் வரக்கூடிய நிதி முழுவதும் ராணுவ வீரர்களின்  நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளது

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 8, 2022, 04:33 PM IST
  • இந்தியன் அவார்ட்ஸ் இறுதிப்போட்டி சென்னையில் நடக்கிறது
  • கிராண்ட் சோழா ஹோட்டலில் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறவிருக்கிறது
  • இதன் மூலம் வரும் நிதியை ராணுவ வீரர்களின் நலனுக்கு கொடுக்க முடிவு
ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு கொடுக்கப்படும் நிதி - இந்தியன் அவார்ட்ஸின் முயற்சி title=

சாமானிய மக்களை பிரபலமாக்கும்  வகையில் Indian Media Works சார்பில் நடத்தப்படும் இந்தியன் அவார்ட்ஸ் 2022 மற்றும்
Mr Miss & Mrs தமிழகம் நிகச்சிகளின் இறுதிப்போட்டி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி சென்னை கிராண்ட் சோழா  நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. விருதுகள் வழங்கப் படுவதற்கான அறிவிப்பை விஷால் ஜெயின், பெரியசாமி, யோகேஷ், ஜான் அமலன், அரவிந்த் பாலாஜி, Avmk சண்முகம், சிமு ஜார்ஜ்  மற்றும் வினோத் ஆகியோர் அறிவித்தனர். சுமார் 100 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ள நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை  அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், Mr Miss & Mrs தமிழகம் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கிரிடத்துடன் கூடிய  ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், வெற்றியாளர்கள் துபாய் போன்ற நாடுகளில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் .

மேலும் படிக்க | இந்திக்கு நோ சொல்வார்கள்; இந்தி படத்தை மட்டும் விநியோகிப்பார்கள் - உதயநிதியை விமர்சிக்கும் அண்ணாமலை

இந்நிலையில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் இந்திய ராணுவ வீரர்களின்  நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேனர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; பலர் காயம்

இதனால் அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டுமெனவும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | கோவையில் ஜோதிடர் மரணம் : வழக்குத் கொடுத்தவர்கள் மீதே வழக்குப்பதிவு! - என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News