முன்னாள் நீதிபதி கர்ணன் கைது - இன்று கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று கொல்கத்தா கொண்டு செல்லப்படவுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய கடந்த மாதம் 9-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால், அவர் திடிரென தலை மறைவானார். எனவே கொல்கத்தா போலீஸ் தனிப்படை அமைத்து, அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று கோவையில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட ன் நீதிபதி கர்ணன் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.
இன்று காலை 11 மணிக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அவர் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீதித்துறையில் ஊழல் மலிந்து கிடக்கிறது. அதை எதிர்த்து குரல் கொடுத்ததால்தான், என்னை கைது செய்கின்றனர். ஆனால் நான் நீதிபதிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தேன். தலித் சமூகத்தை சேர்ந்த எனது உத்தரவை யாரும் மதிக்கவில்லை. நான் குற்றவாளி அல்ல. நாட்டு மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என அவர் கூறினார்.