சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பதவியேற்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட் மூத்த நீதிபதியான வி.கே.தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பேனர்ஜி செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்றார்.


இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில்  தகில் ரமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.


1982-ம் ஆண்டு மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். 17 ஆண்டுகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பல சிறப்புவாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய அவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி பதவியேற்கிறார்.