விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 22க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நாளை மறுதினம் மனு அளிக்க உள்ளதாக பா.ஜ.க. மாநில அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செயற்குழு கூட்டம்:


கோவை ஈச்சனாரி பகுதியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலையில் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவருடன், தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் வி.எல் சந்தோஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா,மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா உட்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.


செய்தியாளர் சந்திப்பு:


கோவையில் நடைப்பெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நாளை காலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கள்ள சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக கூறினார். சென்னையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தான் பங்கேற்க போவதாக அண்ணாமலை கூறினார். 


மேலும் படிக்க | கள்ளச்சாராய மரணம்: CBCID விசாரணை தொடங்கியது


ஆளுநரிடம் மனு:


தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான ஒரு மனுவும், அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என ஒரு மனுவும் ஆளுநரிடம் கொடுக்கப்பட உள்ளதாக கூறினார். இது தொடர்பாக நாளை மறுதினம் பாஜக குழுவினருடன் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம் என்றும் அண்ணாமலை கூறினார். 
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெறுகிறது. 


செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ள அம்சங்கள்:


இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி டி ரவி இதைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


இந்த செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து நாளை நடைபெறும் மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கொண்டாடுவது உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | Tamil Nadu 10th Result: தேர்ச்சியில் பெரம்பலூர் முதலிடம்... சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ