விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் 3 பெண்கள் உள்பட 10 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Written by - Yuvashree | Last Updated : May 15, 2023, 01:59 PM IST
  • விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் உயிரிழப்பு.
  • முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு.
  • முதல்வர் நேரில் சென்று ஆதரவு.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் 3 பெண்கள் உள்பட 10 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்! title=

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்திற்கு பலி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்தது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் குடித்துள்ளனர். உடனே அதனை உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் புதுவை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இதையடத்து, அவர்கள் குடித்திருந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது. அனுமதிக்கப்பட்டவர்களில் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க | திமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு வர வேண்டும் - விசிகவுக்கு வானதி அழைப்பு

போலீஸார் குவிப்பு

உயிரிழப்புகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் எக்கியார் குப்பத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், மேலும் சிலர் இவ்வாறு கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மதுராந்தகம் பகுதியிலும் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் கடந்த 3 நாட்களில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இன்று கள்ளச்சாராயத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

போலீஸார் கூறுவது என்ன? 

விழுப்புரத்தில் தொடர்ந்து பலர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகியுள்ளதை ஒட்டி, அந்த மாவட்டம் முழுவதும் பலத்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சாராயம் குடுத்த மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற வகையிலும் விசாரணை மேற்காெண்டு வருவதாகவும் கூறினர்.

முதல்வர் ஆதரவு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இன்று பிற்பகல் விழுப்புரத்திற்கு புறப்படுகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | மூதாட்டி கொலை: மருமகள் உள்பட 5 பேர் கைத

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News