சென்னை: புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன் என இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. எல்லோரும் அமைதியாக இருந்தால் இந்தி நம் மீது திணிக்கப்படும். புதிய கல்வி கொள்கை விஷயத்தில் நம் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச்சொல்ல வேண்டும். என்றார். புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசிய அவர், அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்றும், 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையைப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் பலிகொடுத்து விடக்கூடாது என்று நடிகர் சூர்யா பேசினார்.


சூர்யாவின் பேச்சுக்கு பாஜக மற்றும் அதிமுக சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பலர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இன்று இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் எனக் கூறியுள்ளார்.


அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-


புதிய கல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் @Suriya_offl நாம் துணை நிற்போம்! #StandWithSuriya 


இவ்வாறு பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.