கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ‌ ராஜு , மாபா பாண்டியராஜன், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில்., தமிழகத்தில் அதிக தொகுதிகள் நிற்கும் கட்சி அதிமுக தான். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட அதிமுகவில் யாரும் இல்லை என்று கூறினார்கள்.


மேலும் படிக்க | Annamalai Nomination : அண்ணாமலை வேட்புமனுவில் குளறுபடி உண்மையா?


அனைவரும் கன்னத்தில் கைவைத்து ஒதுங்கி நிற்கும் வகையில் எளிய தொண்டரை வேட்பாளராக அதிமுக நிறுத்தியுள்ளது .திமுக போன்று குடும்ப அரசியல் வரிசினை நிறுத்தாமல் அதிமுக கிளை செயலாளரை நிறுத்தியுள்ளது. அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது.


திமுக நம்ம (அதிமுக) பக்கதில் கூட வர முடியாத நிலை மக்கள் மனதில் உள்ளது. அதிமுக என்பது நம்பர் 1 இயக்கம். திமுக அரசின் கடந்த 3 ஆண்டுகளாக செய்த சாதனகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லவில்லை. அதிமுக - பாஜக இடையே கள்ள உறவு இருப்பதாக கூறி பேசி வருகின்றார்.2019ல் இருந்த அலை போல் இன்றைக்கு அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது.


ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தாங்கள் செய்த சாதனைகளை செய்யாமல் அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி பற்றி தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுகவிற்காக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அதிமுகவினரை கண்டு முதல்வருக்கு பயம் வந்து விட்டது.


மகளிர் உரிமைத் தொகை, கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி இது போன்ற பிரச்சனைகளில் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக உள்ள நிலை அதிமுக வேட்பாளர் சென்னைக்கு ஓடி போய் விடமாட்டார். இங்கே தான் இருப்பார். 


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதும் அவர் சென்னையில் வைத்து இருப்பது போல் 6 சட்டமன்ற தொகுதியில் புத்தூர் கட்டு மையம் அமைக்கப்படும். 3வது கூட்டணி புஸ்வாணம் ஆகி விட்டது. திமுக - பாஜகவின் தான் இடையே தான் போட்டி என்று மாயை உருவாக்க நினைத்தவர்கள் புஸ்வாணம் ஆகி விட்டார்கள்.


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அந்த அணியில் டம்மி வேட்பாளரை அறிவித்துள்ளனர். ஏற்கனவே பஞ்சராண சைக்கிளை தூசி தட்டி கொண்டு வந்துள்ளனர்.


இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி செய்தனர் ஆனால் அந்த சின்னம் நமக்கு தான் சொந்தம் என்று வந்துவிட்டது.. எத்தனையோ கட்சிகளுக்கு சின்னம் கிடைக்காத நிலை உள்ளது.திமுக கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை , திமுக கூட்டணி கட்சியினர் கண்ணீருடன் உள்ளனர். அங்கு ஒற்றுமை இல்லை.


நாடாளுமன்ற தேர்தல் நமக்கு செமி ஃபைனல் - இதில் வெற்றி பெற்றால் அடுத்த வரும் சட்டமன்ற தேர்தல் பைனலுக்கு சென்று வெற்றி பெற முடியும் என்றார்.


மேலும் படிக்க | ’மோடி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்’ தாராபுரத்தில் கனிமொழி சொன்ன அந்த பாயிண்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ