BJP President Annamalai Nomination in Coimbatore : கோவை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் நீதிமன்ற முத்திரை தாள் தவறாக இணைக்கப்பட்டதாக அதிமுக, திமுக புகார் தெரிவித்தன. கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டபோதும், தேர்தல் அதிகாரி அண்ணாமலை வேட்புமனுவை ஏற்றுக் கொண்டார். இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள அண்ணாமலை, களத்தில் எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக விளக்கம் அளித்துள்ளார். கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் 100% வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் கூட்டத்தை முடித்து வெளியே வந்த அண்ணாமலையிடம் வேட்பு மனு குளறுபடி குறித்த எதிர் கட்சியினரின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் போல் டிராமா வேறு வழியில் கொண்டு வந்துள்ளார்கள்.
மேலும் படிக்க | ரூ. 1000 சர்ச்சை வீடியோ! “தோல்வி பயத்தில் இப்படியா..” கதிர் ஆனந்த் அதிரடி பதிவு!
இரண்டு வேட்பு மனுக்கள் சப்மிட் செய்வோம் அரசியல் கட்சிகளுக்கும் முறையாக வைத்துள்ளோம் சீரியல் நம்பர் 15, 27 என வேட்பு மனுக்கள் சப்மிட் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் தயார் செய்யும் பொழுது வழக்கறிஞர்களிடையே குழப்பம் இருந்ததால் நாங்களே இரண்டையும் தயார் செய்தோம். இது ஒரு பெரிய விஷயம் அல்ல. எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கிறார்கள். இது அவர்கள் தோல்வி பயத்தை காட்டுகிறது. உச்சபட்சமாக நிராகரிக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் இந்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டுள்ளது.
சீரியல் நம்பர் 15 மற்றும் சீரியல் நம்பர் 27 இரண்டும் நாம் எப்போது தாக்கல் செய்தோமோ சேப்டிக்கு ஸ்பேர் காப்பி தாக்கல் செய்வோம். மேலும் விளக்கம் வேண்டம் என்றால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம். வேண்டுமென்றே பொய்யான செய்தியை சொல்லி உள்ளார்கள்" என தெரிவித்தார். ஆனால் இதற்கு அதிமுக, திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வேட்புமனு தாக்கலின்போது Non Judicial பத்திரத்தில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத Court Fee பத்திரத்தை பயன்படுத்தி அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இது அப்பட்டமான விதிமீறல். தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்து அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அதிமுக புகார் தெரிவித்துள்ளது. திமுக சார்பிலும் இதுகுறித்து வழக்கு தொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மன்சூர் அலிகான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ