மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்கள் உடல நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  தன்னை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதி என தன்னை தானே அறிவித்துக் கொண்டு, நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும் என பேஸ்புக் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக  அறிவித்துள்ளார்.


தற்போதைய மடாதிபதியான. மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதார், சுவாச பிரச்சனை காரணமாக, மதுரை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆக்ஸ்ட் 8ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
முன்னதாக நித்யானந்தா இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட போது, கடும் சர்ச்சை எழுந்தது.  அதை அடுத்து, அறிவிப்பு  திரும்ப பெறப்பட்டது. 


ALSO READ | நித்யானந்தாவின் அடுத்த அதிரடி, கைலாசாவில் 3 நாட்கள்: விசா, உணவு, இருப்பிடம் all free


இதை அடுத்து, வாபஸ் பெறப்பட்ட உத்தரவை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் 2018 ஆம் ஆண்டு வெளியான உத்தரவில், மதுரை ஆதீன மடத்திற்குள் நிழைய தடை விதிக்கப்பட்டது. கைலாசா என்ற தனிநாடு மற்றும் நாணயம் அறிவித்து , அதற்கென்று ஒரு பாஸ்போர்ட்டும்  வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினால் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆஸ்திரேலியாவின் அருகாமையில் உள்ள தனித் தீவு ஒன்றினை, நித்தியானந்தா சொந்தமாக வாங்கி 'கைலாசவாக' மாற்றியிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


ALSO READ | இந்திய பக்தர்களுக்கு கைலாசாவில் No Entry, நித்தியானந்தா தடாலடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR