இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் தடுப்பூசி (Vaccination) செயல்முறை முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தொற்றின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபல நித்தியானந்தா (Nithyananda) சமீபத்தில் கைலாசா (Kailasa) என்ற பெயரில் தனித் தீவு ஒன்றினை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அனைத்தையும் அறிவித்து இருந்தார்.
ஆஸ்திரேலியாவின் அருகாமையில் உள்ள தனித் தீவு ஒன்றினை, நித்தியானந்தா சொந்தமாக வாங்கி 'கைலாசவாக' மாற்றியிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
ALSO READ | காலணா முதல் 10 காசு வரை.....கைலாசா நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா
இந்நிலையில் தற்போது கொரோனா (Coronavirus) நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளதால் தனி தீவாக செயல்பட்டு வரும் கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பை நித்தியானந்தா வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR