DMK 75th Year Meeting Latest News Updates: சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கோவிலம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. அப்பகுதியின் திமுக ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தென்சென்னையில் டெப்பாசிட்டை இழந்தது. அனைத்து திமுக நிர்வாகிகளும் வீடுகளில் இருவன்ன திமுக கொடியை ஏற்றி வைக்க வெண்டும் என்று தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார், அதை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.


AI மூலம் கருணாநிதி...


சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள பவள விழாவின் மேடையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் பக்கத்தில் மறைந்த தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி  அமர உள்ளார். AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த கருணாநிதி மேடையில் வர போகிறார்" என்றார். மா.சுப்பிரமணியன் இந்த சஸ்பென்ஸை போட்டு உடைத்ததை தொடர்ந்து, திமுகவினர் பலருக்கும் பவள விழா நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.


மேலும் படிக்க | தமிழகத்தில் ஊடுருவ பார்க்கும் ஆர்எஸ்எஸ்? ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு!


அதை தொடர்ந்து பேசிய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,"நடைபெறவுள்ள திமுக பவளவிழாவில் நாம் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்று தந்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி" என்றார். தொடர்ந்து, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் உரையாற்றினார். 


அப்போது அவர்,"இரண்டாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை வென்றெடுக்க அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருக்கும் இறந்தவர்களின் பெயர்களையும், இடம் மாற்றம் செய்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். அதை நாம் நேரில் சென்று ஆய்வு செய்து நீக்க வேண்டும்" என கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபகர்ராஜா, தொகுதி பொறுப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


திமுக பவள விழா


திமுகவின் முப்பெரும் ஆண்டுதோறும் அக்கட்சி தொடங்கப்பட்ட தினத்தையொட்டி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆவதை போற்றும்விதமாக இந்தாண்டின் முப்பெரும் விழா பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. வரும் செப். 17ஆம் தேதி அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் பவள விழா, முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. 


1985ஆம் ஆண்டில் இருந்து இந்த முப்பெரும் விழாவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. 2008ஆம் ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும், 2018ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில், இந்தாண்டு முதல் மு.க.ஸ்டாலின் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. அதில் இந்தாண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தஞ்சையின் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2004-2012ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணையமைச்சராக பணியாற்றி வந்தவர் ஆவார்.  


மேலும் படிக்க | 2026 கூட்டணி மாறுமா? விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த “நச்” விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ