Kalaignar Magalir Urimai Thogai Latest News Tamil | தமிழ்நாட்டில் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப பெண்களுக்கும் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துகிறது. வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் தற்போது வரை 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் பெற்று வருகின்றனர். இன்னும் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் பெண்களில் சிலர் நடைமுறைச் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதாவது, மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பெறும் பெண்களில் சிலருக்கு திடீரென பணம் வந்ததாக மெசேஜ் மட்டும் வந்து பணம் வரவில்லை என்ற புகார் அவ்வப்போது எழுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசே உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?


மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பெறும் பெண்கள் திடீரென மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்குக்கு வரவில்லை என்றால் உடனடியாக உங்களின் வங்கி கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். அங்கு, வங்கி கணக்குக்கு மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டதாக வந்த  குறுஞ்செய்தியை வங்கி அலுவலர்களிடம் காட்ட வேண்டும். உடனடியாக அவர்கள் உங்கள் வங்கி கணக்கில் ஏன் பணம் இன்னும் வரவு வைக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் உங்கள் பக்கம் ஏதேனும் கூடுதல் ஆவணம் கொடுக்க வேண்டியிருந்தால் அதனை கொடுத்து மகளிர் உரிமைத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். 


மேலும் படிக்க | Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..


மகளிர் உரிமைத் தொகை வராமல் இருப்பதற்கான காரணம்?


நீங்கள் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்துக்காக கொடுத்த ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உங்களுக்கு பணம் வராது. அல்லது ஆவணங்கள் மாற்றி கொடுக்கப்பட்டிருந்தால் அல்லது கொடுக்கப்படாமல் இருந்தாலும் இந்த உரிமைத் தொகை வராது. நீங்கள் கட்டாயம் ஆதார் அட்டை  கொடுத்திருக்க வேண்டும். அந்த ஆதார் அட்டை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். 


புதிய விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு


மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணபித்தவர்கள், ஆன்லைன் வழியாக தங்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளுங்கள். உங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும்போது உரிமைத் தொகை வரவு வைக்கப்படாது. விண்ணப்பம் ஏற்கப்பட்டால் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்குக்கு வரும். ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள், நீங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் என்பதற்கான ஆதாரங்களை இணைந்து இ-சேவை மையம் மூலம் வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் விண்ணப்பதாரரின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும். மெசேஜ் வரவில்லை என்றால், ஆதார் கார்டு, வங்கி கணக்குக்கு எந்த மொபைல் எண்ணை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். 


மேலும் படிக்க | தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ