Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..

Free Ration Card Camp In Tamil Nadu: ரேஷன் அட்டை விண்ணப்பம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் என ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களை பெற ரேஷன் அட்டை சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ளுங்கள்.

Ration Card Camp Details: தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்துக்கொண்டு ரேஷன் அட்டை குறித்து அனைத்து அப்டேட் பெற்றுக்கொள்ளுங்கள்.

1 /7

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ரேஷன் அட்டைக்கு விண்ணப்ப செய்தல், ரேஷன் அட்டையில் பெயர் சேர்ப்பு, ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம், ரேஷன் அட்டை முகவரி மாற்றம் என ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

2 /7

இதற்காக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு முகாம், இந்த மாதம் (அக்டோபர்) 19 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த ரேஷன் அட்டை சிறப்பு சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

3 /7

இந்த ரேஷன் அட்டை சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

4 /7

நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் கூறபப்ட்டு உள்ளது. 

5 /7

அதுமட்டுமில்லாமல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடு, தனியார் சந்தியாயில் விற்கப்படும் பொருட்கள், சேவையில் குறைபாடுகள் போன்ற புகார்கள் இருந்தால், சிறப்பு முகாம் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இதன்மூலம் புகாரின் அடிப்படையில் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6 /7

முன்னுரிமை அட்டைகள் (PHH), 2.முன்னுரிமை (PHH-AAY), 3. முன்னுரிமையற்ற அட்டைகள் (NPHH), 4. சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S), 5. பொருளில்லா அட்டை (NPHH-NC).

7 /7

இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும், தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், இந்தியாவில் வேறு எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது,