Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாரயத்தை குடித்து நூற்றுக்கும் மேலான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என பல இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பத்தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டார. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் தற்போது வரை செய்யப்பட்டுள்னர். மறுபுறம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


இதுவரை கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜன், அவரின் மனைவி விஜயா, கோவிந்தராஜனின் சகோதரர் தாமோதரன்மேலும், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கண் பார்வை இழப்பு, செவித்திறன் குறைப்பாடு, வயிற்று வலி, ரத்த வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் தூத்துக்குடி கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ள சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்தும் சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் தமிழகம் மட்டும்மில்லாமல் இந்தியாவையே உலுக்கியது.


மேலும் படிக்க | தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது ஏன்? வரலாறும் பின்னணியும்


இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும் இதற்கு காரணமான தமிழக அரசு மற்றும் மெத்தனப்போக்காக செயல்பட்ட காவல் துறையை கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் மற்றும் மீனவ பெண்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


இந்த சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


மேலும் தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ