கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை

Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 20, 2024, 11:33 AM IST
  • இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
  • காவல்துறை மற்றும் மதுவிலக்கு பிரிவினர் பலரும் சஸ்பென்ட்.
கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை title=

Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாரயத்தை குடித்து நூற்றுக்கும் மேலான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என பல இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

வெளியான பகீர் தகவல்

இதுவரை கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜன், அவரின் மனைவி விஜயா, கோவிந்தராஜனின் சகோதரர் தாமோதரன்மேலும், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கண் பார்வை இழப்பு, செவித்திறன் குறைப்பாடு, வயிற்று வலி, ரத்த வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் அதிமாக பதிவானதற்கு மற்றொரு காரணமும் தற்போது வெளிவந்துள்ளது.

துக்க வீட்டில் கள்ளச்சாராயம்...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட சுரேஷ், பிரவின் ஆகிய நபர்கள் நேற்று உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால்தான் உயிரிழந்தார்கள் என யாருக்கும் தெரியவில்லை. அப்படியிருக்க, சுரேஷுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் கள்ளச்சாராயம் வழங்கப்பட்டுள்ளது. துக்க வீட்டிற்கு வந்தவர்களும் கள்ளச்சாராயம் குடித்ததால் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது.

மேலும் படிக்க | சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! முதலமைச்சர் உறுதி!

முன்னாள் மாவட்ட ஆட்சியரின் தவறான கருத்து 

குறிப்பாக, நேற்று காலை நடந்த முதல்கட்ட உயிரிழப்பிற்கு முன் மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார், இந்த உயிரிழப்புகள் கள்ளச்சாராயத்தால் ஏற்படவில்லை என கூறியிருந்தார். மாவட்ட ஆட்சியரின் சொன்ன இந்த கருத்தால் நிலைமையின் தீவிரம் அங்கு பலருக்கும் தெரியவில்லை. கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்ட பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மெத்தனால் அவர்களின் ரத்தத்தில் அதிகளவு கலந்திருக்கும்பட்சத்தில் அவர்களின் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. இதனால்தான், உயிரிழப்புகளும் அதிகமாகியுள்ளது.

தாமதமான சிகிச்சை 

மாவட்ட ஆட்சியரின் தவறான கருத்தால், கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு வராமல் தாமதாக வந்துள்ளனர். முன்னரே வந்திருக்கும்பட்சத்தில் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஏன் தவறான கருத்தை தெரிவித்தார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பும் நிலையில், சிபிசிஐடி போலீசார் அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிகிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பலரும் அதே கள்ளச்சாராயத்தை குடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர் மட்ட குழு ஆலோசனை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 19, சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிசிஐடி தங்களின் விசாரணையை தொடங்கியிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் உயர் மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம்: 34 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News