கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஜாமினில் வெளிவந்தனர்
Kallakurichi Incident: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமினில் வெளிவந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமினில் வெளிவந்தனர். பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையில் இருந்தும், பள்ளி செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய மூவரும் பெண்கள் தனி கிளைச்சிறையிலும் இருந்து ஜாமினில் வெளிவந்தனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரைக்கும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருந்தும் கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தாளாளர் உட்பட 4 பேருக்கு ஐகோர்ட் ஜாமீன்
பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேரும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக, பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கனியாமூர் பள்ளி ஜூலை 13 ஆம் தேதி மர்ம மரணம் அடைந்தது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துனர்.
மேலும் படிக்க | ’குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது’ ஸ்ரீமதி தாயார் கண்ணீர் பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ