கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆவணங்களை தீ வைத்து கொளுத்திய நபர் கைது

Arrests Related to Kallakurichi Sakthi Matriculation School violence: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை தீ வைத்து கொளுத்தி மாணவர்களின் சான்றிதழ்களை கொழுத்திய நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2022, 09:35 AM IST
  • கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி வன்முறை கைது
  • மாணவர்களின் சான்றிதழ்களை கொழுத்திய நபர் கைது
  • லட்சாதிபதி என்ற வன்முறையாளர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்
கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆவணங்களை தீ வைத்து கொளுத்திய நபர் கைது title=

கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் ஈடுபட்ட புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது சக்தி பள்ளியில் அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்று ஆவணங்களை தீ வைத்து கொளுத்திய நபரை வீடியோ ஆதாரங்களை வைத்து பிடித்தனர்.

பிடிபட்ட அவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சாதிபதி என்ற அந்த நபரின் கைது தொடர்பாக போலீசார் பத்திரிக்கைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

லட்சாதிபதி என்ற அந்த 34 வயது நபர், வெறியுடன் பள்ளியின் அலுவலக அறையில் இருக்கும் ஆவணங்களை தீ வைத்து எரிக்கும் காட்சி அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க | கலவரத்தில் எடுத்து சென்ற பொருட்களை சாலையோரம் வீசி சென்ற பொதுமக்கள்

இந்த வன்முறை சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து லட்சாதிபதியை அடையாளம் கண்டு தேடி வந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த அந்த நபரை திருப்பூரில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லட்சாதிபதி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

கணியாமூர் கிராம சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால், அந்த பள்ளியில் பயின்று வந்த 3000 திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியது. இதனை அடுத்து, கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவர்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் வழங்க அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது. அரசின் அறிவிப்பை அடுத்து, 2000 மாணவ மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டதால் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற பெரும் வன்முறை சம்பவத்தில், பள்ளி அடுத்து நொறுக்கப்பட்டு பள்ளியில் உள்ள உடைமைகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வீடியோக்களை வலைதளத்தில் பதிவிட்டால் நடவடிக்கை

மேலும் படிக்க | சிதைக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News