நாடாளுமன்ற தேர்தல் 2024


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. பூத் கமிட்டி அமைப்பது முதல் அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் வரை அனைத்து ஏற்பாடுகளையும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வார்டு வாரியாக மேற்கொண்டு வருகின்றன. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியும் செய்து வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.


மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட வித்தியாசமான போஸ்டர்! இணையத்தில் வைரல்!


கமல்ஹாசன் சந்திப்பு
 
கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்குள் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியின் கட்டமைப்பை வலுவாக்க வேண்டும் என கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணி முடிவை எடுத்த கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது. 


திமுக கூட்டணியில் மநீம


இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார். மீண்டும் கோவையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்களுக்கு எனது  வாழ்த்துக்கள் என்று கூறினார். கமல்ஹாசனை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் முடிவிலும் அவர் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ