`நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது`: கமல்ஹாசன்
படத்தை பார்த்துவிட்டுதான் கருத்து தெரிவிக்கவேண்டும்; நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
படத்தை பார்த்துவிட்டுதான் கருத்து தெரிவிக்கவேண்டும்; நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரையுலக வாழ்வில் 25-ஆவது திரைப்படமாக உருவாகி வரும் படம் சீதக்காதி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் மூத்த நாடகக் கலைஞராக நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இவருடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வஸந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை 'பேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள அய்யா என்ற பாடலினை வெளியிட்ட படக்குழுவினர், கடந்த அக்டோபர் 17-ஆம் நாள் இப்படத்திற்கு தனிக்கை குழு U சான்றிதழ் அளித்துள்ளதாக அறிவித்தனர்.
இதையடுத்து, இத்திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சீதக்காதி படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல் படத்தை பார்த்துவிட்டுதான் கருத்து தெரிவிக்கவேண்டும்; நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும், பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் உள்ளது என தெரிவித்துள்ளார்.