மக்களைவை தேர்தலில் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழல் பற்றியும், மக்களுடனான பயணத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. அதைத்தவிர வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்கமல்ஹாசன் கூறியதாவது: எங்கள் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துபோகும் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பை மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முழுமையான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.


நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.