பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போல கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் இருந்தார். அறிக்கை மூலம் மட்டுமே அரசியல் செய்து வந்த கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். 


நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலும் அரசியலும் கலந்து பேசுவார் கமல்ஹாசன். பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்கப்போகிறது. இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் கொரோனா விழிப்புணர்வு போல எடுக்கப்பட்டுள்ளது. தப்புன்னா தட்டிக்கேட்பேன்... நல்லதுன்னா தட்டிக்கொடுப்போன் என்று பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.


ALSO READ | Bigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!! 


இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறிப்பிட்ட காலத்தில் ஒளிபரப்பாகவில்லை. லாக்டவுன் தளர்வை அடுத்து தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரோமா ஒளிபரப்பாகி வருகிறது. அதனை கிண்டலடித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.


இந்நிலையில், இன்று கிண்டியில் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனாவிற்கு பயந்து கமல்ஹாசன் வீட்டிற்குள் முடங்கியிருந்ததாக கூறியிருக்கிறார். அறிக்கை மூலமே அரசியல் நடத்தும் கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். கமல் என்னதான் தோப்புக்கரணம் போட்டாலும், குட்டிக்கரணம் போட்டாலும், பல்டி அடித்தாலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று அவர் கூறினார். 


ZEE ஹிந்துஸ்தான் மொபைல் செயலியை பதிவிறக்க: 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR