Assembly Election 2021 News LIVE Updates: பிரபல நடிகரும் அரசியல்வாதியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் 234 சட்டசபை தொகுதிகளில் 154 இல் போட்டியிடும். மீதமுள்ள 80 இடங்களை அதன் இரு கூட்டணி கட்சிகளான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு மக்கள் நீதி மய்யம் ஒதுக்கியுள்ளது. இவ்விரு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொகுதிப் பங்கீடு குறித்த இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி திங்களன்று நள்ளிரவில் அறிவித்தது.


மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam), 2019 மக்களவைத் தேர்தலில் சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன் பங்கு நகர்ப்புற தொகுதிகளில் 10 சதவீதமாக உயர்ந்தது. ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் கூட்டணிக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கமல்ஹாசன் முன்பு கூறியிருந்தார்.


ALSO READ: நாங்கள் கூட்டணி அமைக்க ஊழலற்ற கட்சிகளைக் காணவில்லை, தனித்தே போராடுவோம்: சீமான்


தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த கமல்ஹாசன், இல்லத்தரசிகளின் கௌரரவத்தையும் அங்கீகாரத்தையும் உறுதி செய்வதில் எம்.என்.எம் உறுதிபூண்டுள்ளது என்றார். சீருடை பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கும் என்று கட்சி அறிவித்தது. அவசர நிலையில், மற்ற ஊர்களில் சிக்கிக்கொள்ளும் பெண்களுக்கு உதவ, ஒவ்வொடு மாவட்டத்திலும் இலவசமாக தங்கிக்கொள்ள விடுதிகள் அமைக்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் வங்கிகளை நிறுவுதலும் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் வருவாய்க்கான ஏற்பாடு ஆகிய உறுதிகளும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, தனது தேர்தல் பிரச்சாரத்தை (Election Campaign) துவக்கிய கமல்ஹாசன், பாஜக மற்றும் அதிமுகவை தாக்கும் வகையில், தமிழர்களின் பெருமையை பற்றி பேசி தமிழர்களை தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என பாஜக கருதுவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக அதிமுக (AIADMK) அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.


"தமிழர்கள் விற்பனைக்கு அல்ல, அவர்களின் வாக்குகளும் விற்பனைக்கு அல்ல” என்று கூறிய கமல்ஹாசன், ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்க தங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.


ALSO READ: தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR