தமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்

தமிழர்களின் பெருமையை பற்றி பேசி தமிழர்களை தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என பாஜக கருதுவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக அதிமுக அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது என்றும் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2021, 10:45 AM IST
  • சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை-கமல்ஹாசன்.
  • இல்லத்தரசிகளின் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் உறுதி செய்வதில் எம்.என்.எம் உறுதிபூண்டுள்ளது-கமல்ஹாசன்.
  • வளர்ந்து வரும் கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் இருப்பார்-சரத்குமார்.
தமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன் title=

சென்னை: மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனருமான கமல்ஹாசன், ஏப்ரல் 6 அன்று நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் கூட்டணிக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தனது பிரச்சாரத்தில் கூறினார்.

நல்ல மனிதர்களுடனான உறவுகளை உருவாக்குவதில் தான் ஆர்வமாக இருப்பதாக மீண்டும் வலியுறுத்திய கமல்ஹாசன், பல கட்சிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சாத்தியமான கூட்டணிக்கான கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரு கட்சிகளுக்கிடையில் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற சமத்துவக் கட்சித் தலைவர் ஆர் சரத் குமாரின் கூற்று பற்றி கேட்கப்பட்டபோது “பல கட்சிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான பேச்சுவார்த்தைகளை துவக்கியுள்ளன. அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி எங்கள் கட்சியுடன் இணைவதாக முடிவெடுத்துள்ளது. நாங்கள் முதலில் கூட்டணியை முடிவு செய்துவிட்டு அதன் பிறகே தொகுதிப் பங்கீடு (Seat Sharing) குறித்து யோசிப்போம்” என்று கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, தெற்கு கடற்கரை மாவட்டமான தூத்துக்குடியில் நடந்த தனது கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய சரத் குமார், தனது கட்சி எம்.என்.எம் உடன் தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், கமல்ஹாசன் அதன் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்றும் கூறினார்.

ALSO READ: தொகுதித் தேர்வில் கூட MGR-ன் வாரிசாக ஆசைப்படுகிறாரா கமல்? கைகொடுக்குமா MGR செண்டிமென்ட்?

"பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கொள்கையளவில், நாங்கள் ஒன்றாக பயணம் செய்ய முடிவு செய்துள்ளோம். வளர்ந்து வரும் கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் இருப்பார்” என்றார் சரத்குமார்.

இதற்கிடையில், எம்.என்.எம்மில் (Makkal Needhi Maiam) இணைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி பொன்ராஜ் கட்சியின் துணைத் தலைவராக இருப்பார் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.

தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளிப் பற்றி அறிவித்த கமல்ஹாசன், இல்லத்தரசிகளின் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் உறுதி செய்வதில் எம்.என்.எம் உறுதிபூண்டுள்ளது என்றார்.

சீருடைப் பணியாளர்களுக்கான ஆளெடுப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கும். தேவையில் உள்ள பெண்கள் அவசரநிலையில் இரவு தங்குவதற்கு வசதியாக, மாவட்டத்திலும் விடுதிகள் அமைக்கப்படும் என்றார் கமல்ஹாசன்.

பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் வங்கிகளை நிறுவுவதும் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீடுகளுக்கான நிரந்தர வருவாய் ஆகியவையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளன.

புதன்கிழமை மாலை கமல்ஹாசன் (Kamal Haasan) தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பாஜக மற்றும் அதிமுகவை தாக்கிப் பேசிய அவர், தமிழர்களின் பெருமையை பற்றி பேசி தமிழர்களை தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என பாஜக கருதுவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக அதிமுக அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

"தமிழர்கள் விற்பனைக்கு அல்ல, அவர்களின் வாக்குகளும் விற்பனைக்கு அல்ல” என்று கூறிய கமல்ஹாசன், ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்க தங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ALSO READ: இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News