கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதியில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுடன் சேர்த்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.


இந்நிலையில், ரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து பல்வேறு அமைப்புகளும், பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் உச்சநீதிமன்றம் மதுரை கிளை வழக்கறிஞர் சரவணன் என்பவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.