நடிகர் கமலஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார். மதுரையில் நடந்த அரசியல் மாநாட்டில் கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, கமல் தனது அரசியல் பயணத்தின் போது கலாம் அவர்களின் இறுதி ஊர்வளத்தில் ஏன் கலந்து கொள்ள வில்லை என்று கேள்வி எழுந்தது. அதற்க்கு பதிலளித்த கமல் ராமநாதபுரத்தில் பேசிய போது தனக்கு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் பழக்கம் இல்லை என்று அவர் கூறினார். இதை தொடர்ந்து துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வரவுள்ளதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் மும்பை சென்றுள்ளார். 


இந்நிலையில் நடிகர் கமல் நடிகை ஸ்ரீதேவி-யின் இறுதி சடங்கிற்கு கலந்துகொள்ள மும்பை கிளம்பியுள்ளதை அடுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல். இந்த இறுதி ஊர்வலம் குறித்த சரசக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் கமல் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூறியதாவது.........!


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கமல், உயிர்ழந்த ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கிறேன். இறுதி ஊர்வலத்தின் கலந்துகொள்வது வழக்கமில்லை என்று முடிவெடுத்த நிலையில், குடும்பத்தில் ஒருவராகக் கருதும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செல்கிறேன்.


பொதுமக்களுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதால், இடையூறுகள் ஏற்படும் என்பதால் தான் நான் அதை தவிர்க்கிறேன் என்று கூறினார்.