எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட வேட்புமனு அளித்தவர்களுடன், கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேர்காணல் நடத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வது மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி, ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி, ஆறாம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி, ஏழாம் கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகதில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையில் அரசியல் கட்சிகளிடையே வேட்பாளர் வேட்டை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட வேட்புமனு அளித்தவர்களுடன், கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேர்காணல் நடத்தினார்.



சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைப்பெற்றதாக கட்சியின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது. 



முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.