மக்களுடனான பயணத்தின் ஒருபகுதியாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லம்பாளையம் கிராமத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் சென்றார். அங்கு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள நல்ல தங்காள் அணையில் மரக்கன்றுகள் நட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் கிராம மக்களின் மத்தியில் உரையாற்றினார். அப்பொழுது அவர், கிராம சபை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டங்கள் புதைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும். கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்.


 



படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகராத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் வரும். ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும். இதை மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்களும் சேர்ந்து செய்ய வேண்டும்.


 



பின்னர் எல்லப்பாளையம் கிராம மக்களுடன் நடந்த மதிய உணவு விருந்தில் அங்கு வந்திருந்த கிராம மக்களுக்கு உணவு பரிமாறினார். பிறகு கிராம மக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார். 


 



அதன்பிறகு பல்லடம், சின்னாண்டிபாளையம் போன்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.