கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை துவங்கினார் கமல்!
நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். புதிய கட்சி, கொடி, கொள்கை அறிவிப்பு என அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் அவர், தனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் இருப்பதாக உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார்.
அப்துல் கலாம் வீட்டில் கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் கமல் ஆசி பெற்றார். அப்துல்கலாம் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கமலிடம் அளித்தார் கலாமின் பேரன் சலீம். இதனையடுத்து அப்துல்கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிடுகிறார் நடிகர் கமல்ஹாசன்.