நடிகர் கமல்ஹாசன் இன்று ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் திடிரென சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன்:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது வெறும் நட்பு ரீதியலான சந்திப்பு, அரசியல் இல்லை. தமது அரசியல் பயணத்தில் பங்கேற்க ரஜினியை அழைத்தேன். தமது அரசியல் பயணத்தில் பங்கேற்பது ரஜினியின் விருப்பம், ஆனால் அவரை வற்புறுத்த முடியாது என கூறினார்


நடிகர் கமலுடனான சந்திப்பிற்கு ரஜினி பேசியது:-


"கமல் அரசியல் பயணம் துவக்கியுள்ளார். அதற்கான அழைப்பிதழ் கொடுத்தார். அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன். நண்பர் கமல் பணத்திற்கோ, பெயருக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. தமிழகத்திற்கு நல்லது செய்யவும், மக்களுக்கு நல்லது செய்யவும் வந்துள்ளா். 


கமலுக்கு எல்லா ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என ஆண்டவைன வேண்டி கொள்கிறேன். கமலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தேன். சினிமாவில் எனது பாணி வேறு அவரது பாணி. அதேபோல் அரசியலிலும் வேறு வேறாக இருக்கும். ஆனால், மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம். "  இவ்வாறு அவர் கூறினார்.