தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் 2 வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கொரோனா நோட்டீஸ் ஒட்டியிருந்தது சர்ச்சையான நிலையில் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். 


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் இல்லத்தின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, கொரோனாவிலிருந்து சென்னையைக் காக்க, எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தரப்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கொரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கமல்ஹாசனிடமே தெரிவிக்காமல் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாக முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.  


நோட்டீஸ் பற்றிக் கேட்டதற்குச் சரியான முகவரியில் தான் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  கமலின் பழைய முகவரி எனத் தெரியாமல் பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், தன்னுடைய வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய வீட்டின் வெளியே கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதை அடுத்து, தான் தனிமைப்படுத்துதலில் இருந்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.