கமல்-லின் அடுத்த திட்டம்: சென்னையில் மார்ச் 8-ல் பொதுக்கூட்டம்!
மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது கட்சியின் சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
சென்னையில் மார்ச் 8-ம் தேதி மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இதையடுத்து, திருச்சியில் ஏப்ரல் 4-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். அதையடுத்து மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது கட்சியின் சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.