தமிழ் வழியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நிருபர்கலுக்கு பேட்டி அளித்தார் அவர், தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 32 மாவட்டங்களை சேர்ந்த 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அவரது பிறந்தநாளில் வழங்கப்படும். 


பத்தாம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும். அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.