கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு வீடியோ...நடந்தது என்ன...முழு விவரம் இங்கே
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசி இழிவு படுத்திய குற்றச்சாட்டில், ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்புகளின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசி இழிவு படுத்திய குற்றச்சாட்டில், ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்புகளின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கந்த சஷ்டி கவசம் குறித்து ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் சிலர் ஆபாசமாகக் கருத்துகளைக் கூறியது உலகம் முழுவதும் வாழும் இந்து சமயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக உட்பட பல்வேறு தரப்புகளின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன. இதையடுத்து, தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ALSO READ | வீட்டு பூஜை அறையில் வைக்ககூடாத சுவாமி படங்கள்!
இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த தொகுப்பாளர் சுரேந்தர் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை தமிழக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஜூலை 30 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் விதமாக விமர்சனம் செய்தது தவறு என்று சமூகவலைதளங்களில் கருத்துப் போர் புரிந்துவருகின்றனர்.
ALSO READ | முருக கடவுளுக்கே ஐபோன் 6S கொடுத்த பக்தன்!
இதற்கிடையில் சென்னை தி நகர், கண்ணம்மாபேட்டையில் இருக்கும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அங்கு சில ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். அலுவலகத்தை வாடகைக்கு விட்ட நபரிடமும் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.