)
Director Suresh Sangaiah Dies : தமிழில் ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களை கவனம் ஈர்த்தவர், சுரேஷ் சங்கையா. கோலிவுட் இயக்குநர்களில் முக்கிய இயக்குநராக கவனம் ஈர்த்த இவர், தற்போது உயிரிழந்திருக்கிறார்.
அவர் இயக்கிய படங்கள்:
2017ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம், ஒரு கிடாயின் கருணை மனு. இந்த படத்தில் விதார்த்துடன் இணைந்து ரவீனா ரவி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ஆட்டுக்கிடாயின் வழியாக மனிதர்களை பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை வைத்து இந்த படத்தை, சினிமா விமர்சகர்கள் பலர் வெகுவாக பாராட்டினர்.
கடந்த ஆண்டும், பிரேம்ஜி ஹீரோவாக நடித்த சத்திய சோதனை படத்தை இயக்கியிருண்டார். இந்த படம், கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியானது. காமெடி க்ரைம் கதையாக உருவாகியிருந்த இப்படம், வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களின் வரவேற்பினை பெற்றது.
உடல்நலக்குறைவு காரணமாக மரணம்:
இயக்குநர் சுரேஷ் சங்கையா, கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னையில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்டுவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சுரேஷ் சங்கையாவின் உடல், கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும் எனவும், அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுரேஷ் சங்கையாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், அவருக்கு ஒரு மகள் இருக்கும் விஷயமும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
படத்தை இயக்க இருந்தார்:
தமிழ் திரையுலகில், தற்போது பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், யோகி பாபு. இவர், சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். அந்த படம், நேரடியாக ஓடிடி தளம் ஒன்றில் வெளியாக இருந்தது. இதற்கான பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் சுரேஷ் சங்கையாவும் இதில் கலந்து கொண்டிருந்தார். பட வேலைகள் ஆரம்பித்த நிலையில் இவர் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவிற்கு சதிரை பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ