மும்பை: பாலிவுட்டின் மிகவும் துணிச்சலான நடிகைகளில் கங்கனா ரனாவத் மிக முக்கியமானவர் ஆவார். தனது மனதில் படும் விஷயங்காளை அவர் உடனுக்குடன் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி விடுவார். தற்போதும் அவர் அப்படிப்பட்ட ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிப்பது குறித்த மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் (Kamal Haasan) கருத்தை பாராட்டி காங்கிரசின் சஷி தரூர் வெளியிட்ட ட்வீட்டுக்கு கங்கனா பதில் அளித்துள்ளார்.


"எங்கள் அன்புக்குரியவரோடு நாங்கள் கொள்ளும் உடலுறவுக்கு விலை வைக்காதீர்கள். எங்கள் தாய்மைக்கு விலை நிர்ணயம் செய்யாதீர்கள். எங்கள் சொந்த சிறிய ராஜ்யத்தின் ராணிகளாக இருப்பதற்கு எங்களுக்கு சம்பளம் தேவையில்லை. எல்லாவற்றையும் வியாபாரமாக பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் பெண்ணிடம் சரணடையுங்கள். உங்களை முழுமையாக அவள் எதிர்பார்க்கிறாள்.  உங்கள் அன்பு / மரியாதை / சம்பளம் மட்டும் தனித்தனியாக அவளுக்கு தேவையல்ல” என்று கங்கனா ரனாவத் (Kangana Ranaut) செவ்வாயன்று தனது சொந்த ட்விட்டர் அகௌண்டிலிருந்து ட்வீட் செய்துள்ளார்.



ALSO READ: தமிழகத்தில் MNM ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் - கமல் அதிரடி!


காங்கிரஸின் எம்.பி. சஷி தரூரின் (Shashi Tharoor) ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனாவின் ட்வீட் வந்தது. சஷி தரூர் தனது ட்வீட்டில், "வீட்டு வேலைகளை சம்பளத் தொழிலாக அங்கீகரிக்கும் @iKamalhaasan உடைய யோசனையை நான் வரவேற்கிறேன். வீட்டு இல்லத்தரசிகளுக்கு மாநில அரசு மாத ஊதியம் கொடுக்கும். இது சமுதாயத்தில் உள்ள பெண்களின் சேவைகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஊதியம் அளிக்கும் வகையில் இருக்கும். இது அவர்களது சக்தி மற்றும் சுய மரியாதையை மேம்படுத்தி உலகளாவிய அடிப்படை வருமானத்திற்கு நிகரான சூழலை உருவாக்கும்” என்று எழுதி இருந்தார்.


இந்த யோசனைக்கு எதிராக தன் கருத்தை வெளிப்படுத்திய கங்கனா, மற்றொரு ட்வீட்டில், "ஒரு வீட்டு உரிமையாளரை வீட்டு வேலையாளாக குறைப்பது போன்றதாகும் இது. தாய்மார்களின் தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு விலையை நிர்ணயிப்பது, படைப்புக்கு நன்றி சொல்லி கடவுளுக்கு ஊதியம் வழங்குவது போன்றதாகும். இந்த யோசனை வலியையும் வேடிக்கையையும் ஒன்றாக அளிக்கின்றது” என்று கூறியுள்ளார்.


முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தல்களுக்கான (TN Assembly Elections) பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தின் போது இது பற்றி குறிப்பிட்டிருந்தார்.


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, “நமது நாட்டில் மட்டுமே பெண்களை பல வழியில் போற்றுகிறோம். அவர்களுக்கு என தனித்திறமை உள்ளதை அனைவருமே உணர்ந்துள்ளோம். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதனையாளர்களாக உள்ளனர். அதை யாரும் மறுக்கமுடியாது.


அதுமட்டுமல்ல, வீட்டில் பல வேலைகளை முன்னின்று செய்பவர்களும் தாய்மார்கள்தான். எனவே, மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும். இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள நேர்மையான ஆண்கள், தாயை வழிபடுவர்கள், இதைப்பற்றி யோசித்து வருகின்றனர். அதை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்” என்றார்.


கமல்ஹாசனின் இந்த கருத்தை பாராட்டி சஷி தரூர் தனது கருத்தை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ: TN Assembly Elections 2021: கழகங்களை கலங்கடித்த கமலின் 7 அம்ச தேர்தல் அறிக்கை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR