’ஆட்சிக்கு வந்தா தானே’ அண்ணாமலைக்கு கனிமொழி சுடச்சுட பதிலடி
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறையை கலைப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் அண்ணாமலை, திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறையை அகற்ற முதல் கையெழுத்து போடுவோம் என்று தெரிவித்தார். மேலும், கடவுள் ஒரு முட்டாள் என கூறுபவரின் சிலையை அகற்றுவோம் என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம்!
இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையான பதிலடியை கொடுத்திருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு பதில் அளித்த அவர், அதற்கு அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என தெரிவித்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர்களுக்கான நகை கடன் வழங்கும் சங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது, மீனவர்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியார்களை சந்தித்தார் அப்போது அவரிடம், திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறையை அகற்றுவதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என கூறி இருக்கிறார், அதற்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு கனிமொழி எம்பி பதில் அளிக்கும்போது, அதற்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என சிரித்தபடி அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.
மேலும் படிக்க | மனைவிகளை மாற்றி உல்லாசம்! ஈசிஆர் பண்ணை வீட்டில் இரவில் நடந்த கூத்து - பகீர் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ