Chennai Crime News: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டில் கணவன் - மனைவி என கூறி பார்ட்டி செய்ய போவதாக ஆன்லைன் வாயிலாக நீச்சல் குளத்தோடு சேர்ந்த பண்ணை வீட்டினை கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
சனிக்கிழமை கணவன் மனைவி என கூறிக் கொண்டு எட்டு போலி தம்பதிகளும், அவர்களுடன் ஜோடியின்றி 10 இளைஞர்களும் வந்துள்ளனர். சனிக்கிழமை பண்ணை வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் இசைக்கவிட்டு அரை நிர்வாண ஆடைகளுடன் பெண்கள் குத்தாட்டம், மது, கஞ்சா, ஜூக்கா என போதையில் மிதந்து ஆட்டம் போட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு பணம் கொடுத்து தங்கிய அந்த 10 இளைஞர்கள் அனைவரும் சென்று விட, ஞாயிற்றுக்கிழமை வேறு 7 இளைஞர்கள் வந்துள்ளனர். வார இறுதி நாளில் மது, போதைபொருள், பெண்கள் என குத்தாட்டம் போட்ட நிலையில் இந்த தகவல் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜூக்கு தெரியவந்தது.
உடனடியாக காவல்துறையினர் பனையூர் பண்ணை வீட்டிற்கு விரைந்துள்ளனர். பாடல் சத்தத்தை தாண்டி காவலர்கள் கதவை ஓங்கி தட்டியதும், ஆண் நபர் ஒருவர் கதவை திறந்தார். காவலர்களை பார்த்ததும் அங்கிருந்த பெண்கள் அறையில் ஓடிப்போய் ஒளிந்துள்ளனர். கையும் களவுமாக 8 பெண்கள், 15 ஆண்கள் சிக்கிக் கொண்டனர். அப்படியே பண்ணை வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே வைத்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டது. விசாரணையின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தது.
மேலும் படிக்க | Crime: அதிமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்! அதிர வைத்த வாக்குமூலம்!
பேஸ்புக் மூலம் விபரீத விளம்பரம்
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(45), ஜெயலட்சுமி(36), என்ற தம்பதி இருவரும் சேர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முகநூல் பக்கத்தில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி அதில் இருந்து real married swap party couples என்ற பக்கத்தை உருவாக்கி அதில் திருமணமாகாத இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் பாலுணர்வை தூண்டும் வகையிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி முதல் பெண்களுடன் உறவு வைத்து கொள்ளலாம், பிறகு நடனம், மது விருந்து பார்ட்டி, நீச்சல் குளத்தில் உறவு என விளம்பரம் செய்து சிங்கில்ஸ் இன்பாக்ஸ் வரவும் என போட்டு விட்டு அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தி பெண்களை வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் மனைவிகளை மாற்றி...
ஒரு நபருக்கு மது மாது விருந்திற்கு 13 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் பணம் வசூலித்து பார்ட்டி என்ற பெயரில் கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு குழுவாக உடலுறவு கொண்டு பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதில் கணவன், மனைவியாக வந்திருந்த சிலர் வறுமையின் காரணமாக, குடும்ப சூழ்நிலையினால் இந்த தொழிலில் வந்து விட்டதாக கண்ணீர்விட்டு விசாரணையில் அழுதுள்ளனர். அங்கிருந்த தம்பதிகள் மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி என பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க | ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
வீடுகளுக்கு தெரியாமல் மனைவிகளிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருந்த ஆண்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். காவல்துறையினர் அவர்களது வீட்டிற்கு தகவல் தெரிவித்து, உறவினர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதே போல் 8 பெண்களையும் அனுப்பி வைத்தனர்.
பிறந்தநாள் பார்ட்டி என்ற போர்வையில்...
8 பெண்களின் கணவன் என கூறிய நபர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆணுறைகள், பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள், மதுபாட்டில்கள், சிறிய அளவில் கஞ்சா, ஹூக்கா போன்றவற்றை பறிமுதல் செய்துனர். காவல்துறையில் சிக்கிக் கொண்டால் பர்த்டே பார்ட்டி என கூறி அதற்கு பிறந்த நாள் இருக்கும் ஒரு நபரை உடன் வைத்துக் கொண்டு நூதன முறையில் 5 ஆண்டுகளாக விபச்சார தொழிலில் கொடிக்கட்டி பறந்துள்ளது இந்த கோயம்புத்தூர் தம்பதி.
பின்னர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(48), குமார் (45), மதுரையைச் சேர்ந்த சந்திர மோகன் (41), சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கர் (35), சென்னையை சேர்ந்த வேல்ராஜ் (40), திருநெல்வேலியை சேர்ந்த செல்வம் (37), திருக்கோவிலுரைச் சேர்ந்த பேரரசன் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் (45) ஆகிய 8 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர்.
அனுமதி இல்லாத ஈ.சி.ஆர் பண்ணை வீடுகள்...
வார இறுதி நாட்களில் ஈ.சி.ஆர் பண்ணை வீட்டில், இது போன்ற பல விதங்களில் விபச்சாரம் நடந்து வருவதாகவும், ஆனலைன் விளம்பரம் செய்து மனைவிகளை மாற்றிக் கொள்வது, இளைஞர்களை சீரழிப்பது மிகப்பெரிய சமூக சீர்கேட்டில் இட்டுச் செல்லும் என்பதால் காவல்துறையினர் முறையான அனுமதியோடு தான் பண்ணை வீடுகள் செயல்படுகிறதா, அங்கு நடக்கும் சட்டவிரோத செயல்கள கண்காணிக்கப்படுகிறதா என கணகாணித்து அனுமதியில்லாத பண்ணை வீடுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் படிக்க | நாவிற்கு சுவையை நல்கும் நாட்டரசன் கோட்டை செட்டி நாட்டு பலகாரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ