மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோக்மட் என்ற செய்தி நிறுவனம் சார்பில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.


லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை பத்து பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு இந்த ஆண்டு தேர்ந்தெடுத்திருக்கிறது. வரும் டிசம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கவிருப்பதாக அந்த செய்தி நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்பியுமான வுஜய் தர்தா கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆற்றிய பணிகள் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காக விருது வழங்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


இந்த விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்ற குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட இந்த குழுவில், டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் சவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இநத்க்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.