தேசப்பணியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தை பாதுகாக்க இந்தியாவே தயாராக இருப்பதாகவும், அணிந்திருக்கும் சட்டை, வேஷ்டியைக் கூட கழற்றிக்கொண்டு செல்லும் நபர்கள் இருக்கும் காலத்தில், தேசப்பணியில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்யும் வீரர்களின் குடும்பத்துக்கு தன் சொத்துக்களை எழுதிவைக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்வதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்கில் போர் முடிவடைந்து 23 ஆண்டுகள் ஆனதை அனுசரிக்கும் கார்கில் விஜய் திவஸ் தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில்  கார்கில் போரில் வீர மரணம் அடைந்த 527 வீரர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.


கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், பாஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவத்தினரை அண்ணாமலை கௌரவித்தார்.


மேலும் படிக்க | Kargil Vijay Diwas: 23வது கார்கில் தினத்தை நினைவுகூரும் புதுச்சேரி 


பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை, இந்தியாவில், கார்கில் விஜய் திவஸ் தினம் முக்கியமானது என்றும், இந்தியாவின் வெற்றியையும், வீரர்களின் தியாகத்தையும் கொண்டாட வேண்டிய நாள் இது என்றும் கூறினார்.


துணிச்சலாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்கள், நாட்டுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் போர் சமமான போர்  அல்ல என்றும் பேசிய அண்ணாமலை, போரில் உயிரிழப்போம் என்று தெரிந்தே 527 வீரர்கள் அதில் பங்கேற்றதாகவும், கார்கில் போரில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு என்று இருப்பது பாஜகவுக்கே பெருமை என்றும் குறிப்பிட்டார்.


தான் சில நாட்களுக்கு முன்னர் விக்ரம் பத்ரா, மேஜர் ஆகிய இரு திரைப்படங்களை பார்த்ததாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, மேஜர் திரைப்படத்தில் நடிகை ரேவதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததாகவும், நடிகை ரேவதி தனது இல்லத்தின் அருகில் வசித்து வந்தாலும், அவரை தன் மனைவி வாயிலாக நேரில் சந்தித்து பேசியதையும் நினைவு கூர்ந்து பேசினார்.


முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தின் போது தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் எழுச்சியைக் கண்டதாகப் பேசிய அண்ணாமலை, தேசப் பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தை பாதுகாக்க இந்தியாவே தயாராக இருப்பதாகவும், அணிந்திருக்கும் சட்டை, வேஷ்டியைக் கூட கழற்றிக்கொண்டு செல்லும் நபர்கள் இருக்கும் காலத்தில், தன் சொத்துக்களை தேசப்பணியில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்யும் வீரர்களின் குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Kargil Vijay Diwas: 23வது கார்கில் தினத்தன்று வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ