கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என வரும் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக காவல்துறைக்கு இறுதிக் கெடு விதிக்கும் வகையில் அம்மாநில உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.


தலைமறைவாக உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை இன்று (டிசம்பர்.,12) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், இன்று அறிக்கை தாக்கல் செய்யாததால், வரும் டிச.,18-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் மாநில காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.


அதேபோல், நித்தியானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க ராம்நகர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக்கோரி அவரது முன்னாள் சீடர் லெனின் என்பவர் தொடர்ந்த வழக்கில், ராம்நகர் நீதிமன்றம் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தா. தற்போது  பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.  நித்யானந்தரின் இந்த மடத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கிளைகள் உள்ளது.  இந்நிலையில், தற்போது  நித்யானந்தா தனக்கென ஒரு புதிய நாட்டையே உருவாக்கி நிர்வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். 


இதனிடையே தன் ஆசிரமத்தில் வளர்ந்து வரும் இரு சிறுமிகளை நித்தியானந்தா கடத்தி சென்றதாக, சிறுமிகளின் தந்தை அளித்து புகாரின் போரில் நித்தியானந்தாரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. குறித்த இந்த குழந்தை கடத்தல் வழக்கில் குஜராத் காவல்துறையினர் நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர் இருக்கும் இடம் குறித்து தகவல்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது.


இருப்பினும் இணைய தளத்தில் நித்தியானந்தா பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாக வைரலாகி வருகின்றன. ஆனால் அவர் எந்த இடத்தில் இருந்து பேசுகின்றார், வீடியோக்கள் எங்கிருந்து வெளியாகிறது என்ற தகவல்கள் கண்டறியப்படா புதிராகவே உள்ளது. 


இதனிடையே போலி சாமியாரான நித்யானந்தா ஈக்வேடார் நாட்டிக்கு சொந்தமான தீவு ஒன்றை விலைக்கு வாங்கி,  சொந்த நாட்டை அமைத்துள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியாகின. ஆனால் அது உண்மை இல்லை என்று அந்நாட்டின் நாட்டின் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் தனது நாட்டில் எந்தவொரு நிலத்தையும் அல்லது எந்த தீவையும் வாங்குவதற்கு அரசாங்கம் நித்யானந்தா உதவ வில்லை என்றும், நித்தியானந்தா ஈக்வேடாரில் தஞ்சம் அடையவில்லை என்று ஈக்வேடார் அரசு பகிரங்கமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.