அர்பிட் பேலஸ் ஹோட்டலின் மேற்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி வந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 25-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைப்பெற்று வருகிறது. மீட்பு பணியில் 30 வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தீ விபத்தை நேரில் பார்த்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.


இந்தநிலையில், அர்பிட் பேலஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியான 17 பேரில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அந்த இரண்டு பேரின் பெயர்கள் 1.அரவிந்த் சுகுமாரன், 2.நந்தகுமார் ஆகும். இவர்கள் இருவரும் ஈஸ்ட்மேன்(East Man) எக்ஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அலுவலகம் வேலை விசியமாக டெல்லி வந்தவர்கள், இந்த ஹோட்டலில் அரை எடுத்து தங்கியுள்ளனர். அப்பொழுது தான் இந்த கோர விபத்தில் சிக்கி பலியாகினர். இவர்களை பற்றி முழுவிவரத்தை டெல்லி தமிழ்நாடு இல்லம் விசாரித்து வருகிறது.