ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா அபிராமி என எல்லோரும் கிளம்பி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது சரவணன் அபிராமிடம் இதுதான் புடிச்ச புளியங்கொம்மா என்று தீபாவை பற்றி கேட்க அபிராமி ஆமா அவ எனக்கேத்த மருமகத்தான் கார்த்திக் என்று சொல்ல தீபா அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - லியோ LCUல் இருக்கா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!


அதன் பிறகு தீபா அபிராமியிடம் நன்றி சொல்ல அவள் இது கிராமம் இங்கே என்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு தான் அப்படி சொன்னேன் நான் சொன்னது எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இதைக் கேட்டுவிடும் கார்த்திக் தீபாவிடம் வந்து எனக்கு உண்மையாகவே உங்களை ரொம்ப பிடிக்கும் இவங்கள் உலக அழகியாகவே இருந்தாலும் குறை சொல்லுவாங்க அதை பத்தி எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என்று ஆறுதல் கூறுகிறான். 


அடுத்து சரவணன் மற்றும் மலர் இருவரும் சேர்ந்து தீபாவிடம் இந்த வீட்டுக்கு ஏற்ற மருமகள் எல்லாமே உங்க மாமியார் வாயாலேயே சொல்ல வைக்கிறோம் என பேச மீனாட்சி தீபாவை கூப்பிட்டு உண்மையாகவே கார்த்திக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ வேணும்னா வேற ஒரு நம்பரில் இருந்து பல்லவியா அவன்கிட்ட பேசி பாரு என்று சொல்ல தீபாவும் கார்த்திக்கு போன் செய்து பல்லவி பேசுவது போல பேசுகிறாள். 



உங்களுக்கு தீபாவ பிடிக்குமா அவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்க எனக்கு தீபாவ ரொம்ப பிடிக்கும் என்று கார்த்திக் சொல்ல அதை கேட்டு தீபா சந்தோஷப்படுகிறாள். இதை கேட்டுவிடும் ஐஸ்வர்யா இதுக்கு ஒரு எண்டு கார்டு போடணும் என திட்டம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க - இணையத்தில் லீக் ஆன ‘லியோ’ படம்..! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ