இணையத்தில் லீக் ஆன ‘லியோ’ படம்..! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

Leo Movie Leaked Online: லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் காட்சிகள் சில இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Oct 19, 2023, 07:43 AM IST
  • லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
  • இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
  • இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இணையத்தில் லீக் ஆன ‘லியோ’ படம்..! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!  title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த படம், லியோ. அப்படம் ஒரு வழியாக இன்று வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில் லியோ படத்திற்கு 9 மணி காட்சிதான் முதல் காட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படம் அதிகாலையிலேயே வெளியிடப்பட்டு விட்டது. அதனால் முன்னரே படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். 

இணையத்தில் லீக் ஆன லியோ:

எதிர்பார்ப்பிற்குறிய எந்த படம் வெளியானலும் ரசிரக்கள் படத்தின் டைட்டில் கார்டு, இடைவேளை காட்சி, சண்டை காட்சி என அனைத்தையும் வீடியாேவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம். அப்படித்தான் லியோ படத்தில் விஜய் வரும் காட்சி, அவர் ஹைனா விலங்குடன் சண்டை போடும் காட்சி என அனைத்தையும் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

என்னென்ன காட்சிகள் வெளியானது? 

லியோ படத்தின் முதல் பாதியில் வரும் சில காட்சிகள் வீடியாேவாக எடுக்கப்பட்டு டிவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அர்ஜூனிற்கும் விஜய்க்கும் இடையேயான சண்டை காட்சிகள், விஜய் மிருகத்துடன் சண்டை போடும் காட்சி, இடைவேளையின் போது விஜய் வரும் காட்சிகள் என பல காட்சிகள் வீடியோக்களாக வெளியாகியுள்ளன. அவற்றை வெளியிட்டவர்களின் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. வீடியோக்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

படம் எல்.சி.யுவில் இருக்கிறதா இல்லையா? 

லியோ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தது. படத்தை ரிலீஸிற்கு முன்பு பார்த்த உதயநிதி ஸ்டலின், அதற்கு தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சனம் கொடுத்திருந்தார். அதில் #LCU என்ற ஹேஷ்டேக்கை இணைத்து பக்கத்தில் கண் அடிக்கும் ஒரு எமோஜியை இணைத்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் லியோ படம் எல்.சி.யுவில் இருப்பதாக முடிவு செய்தனர். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்த்த சிலர் எல்.சி.யு கனெக்டை உறுதி செய்துள்ளனர். 

மேலும் படிக்க | லியோ படத்தை பார்த்து உதயநிதி சொன்ன ரிவியூ! அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!​

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த லாேகி..

லாேகேஷ் கனகராஜ் நேற்று இரவு ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதில், லியோ படத்தில் தன்னுடன் பணிபுரிந்த நடிகர் விஜய் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் அவர் அந்த அறிவிப்பில் நன்றி தெரிவித்திருந்தார். படம் எல்.சி.யுவில் இருக்கிறதா இல்லையா என்பதை வந்து பார்த்து தெரிந்து கொள்ளுமாறும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். 

ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..

லியோ படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி பிற மொழி ரசிகர்களும் பயங்கர வரவேற்பினை அளித்துள்ளனர். படத்தின் முதல் பாதி வேகமான திரைக்கதையை கொண்டுள்ளதாகவும் அடுத்த பாதியில் எதிர்பாராத ட்விஸ்டுகள் இடம் பெற்றுள்ளதாகவும் பல ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

வேண்டுமென்றே படத்தை குறை கூறும் சிலர்..

ஒரு சில தெலுங்கு ரசிகர்களும், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களும் வேண்டுமென்றே லியோ படத்தை தாக்கி டிவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பிறர், படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை புகழ்ந்து வர, சிலர் “இப்படத்தை குடும்ப ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்” என்று லோகேஷ் கனகராஜ் கூறிய விஷயத்தையே மீண்டும் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா லியோ? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News