திமுக தலைவர் கலைஞர் நலம் பெற நான் வேண்டுகிறேன்! தமிழிசை
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் டிவிட்டரில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள கருத்தில்,
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் TNBJP wishes speedy recovery of DMK leader Kalaignar and pray for the same
என பதிவிட்டுள்ளார்.