காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது! தொண்டர்கள் கதறல்!
கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார்.
தற்போது சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் உள்ளனர். சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடலுறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகவும் சீரற்ற நிலையிலும் உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.