தொண்டர்களிடம் வேண்டுகோள் வைத்து அறிக்கை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். மேலும் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர். அந்த வகையில் இன்று நடிகர் விஜய், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அவர்களிடன் கேட்டறிந்தார்.
இந்நிலையில் திமுக தொண்டர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என்றும், கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
இவ்வாறு அறிக்கை veliyitulaaar